/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஸ்டார்ட் அப் ஸ்பிரிண்ட் 2.0' கருத்தரங்கம் அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைப்பு
/
'ஸ்டார்ட் அப் ஸ்பிரிண்ட் 2.0' கருத்தரங்கம் அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைப்பு
'ஸ்டார்ட் அப் ஸ்பிரிண்ட் 2.0' கருத்தரங்கம் அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைப்பு
'ஸ்டார்ட் அப் ஸ்பிரிண்ட் 2.0' கருத்தரங்கம் அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைப்பு
ADDED : மார் 01, 2025 04:26 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு வணிகம் மற்றும் தொழில்துறை சார்பில் 'ஸ்டார்ட் அப் ஸ்பிரிண்ட் 2.0' கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.
கருத்தரங்கை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்து பேசுகையில், 'அட்டல் இங்குபேஷன் திட்டம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில், புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கியுள்ளார். அனைத்து பொருட்களையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும். அதை உள்நாட்டில் சந்தைப்படுத்துவது மட்டுமல்லாமல், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
'ஸ்டார்ட் அப்'க்கு உதவி செய்ய அரசு எல்லா விதத்திலும் தயாராக உள்ளது. புதிய 'ஸ்டார்ட் அப்'களை உருவாக்கி அதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகளை துவங்க மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளோம். ஜூன், ஜூலை மாதத்தில் இது செயல்பாட்டுக்கு வரும். அதில், 'ஸ்டார்ட் அப்'களுக்கு தனியிடம் ஒதுக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
படித்து முடித்த இளைஞர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எம்.என்.சி., கம்பெனிகள் போதிய தனித்திறன் மேம்பாடு புதுச்சேரி இளைஞர்களிடம் இல்லை என கூறுகின்றனர். மொழி மற்றும் தனித் திறனில் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.