/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டு முறைகேட்டில் அமைச்சர் பதவி விலக வேண்டும் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
ரேஷன் கார்டு முறைகேட்டில் அமைச்சர் பதவி விலக வேண்டும் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ரேஷன் கார்டு முறைகேட்டில் அமைச்சர் பதவி விலக வேண்டும் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ரேஷன் கார்டு முறைகேட்டில் அமைச்சர் பதவி விலக வேண்டும் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 20, 2024 04:50 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளில்,நடந்த முறைகேடுகளுக்கு, சம்மந்தப்பட்ட அமைச்சர் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., அரசு ஆட்சியில் உள்ளது. புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கான அனுமதியை, 25 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. பட்ஜெட் அனுமதிக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை நம் அரசுக்குஏற்பட்டுள்ளது.
நிதி செயலாளரும், தலைமை செயலாளரும் நேரடியாக டில்லிக்கு சென்றால் ஒரே நாளில் பட்ஜெட்டிற்கான அனுமதியை பெற முடியும்.இவர்களின் பொறுப்பற்ற செயலால், இம்மாத இறுதியில் கூட்டப்பட வேண்டிய சட்டசபை கூட்டத்தொடருக்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
புதுச்சேரிமாநிலத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதில் ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.30 கோடிக்கு மேல்,போலி ரேஷன் கார்டுகளுக்கு அரிசிக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதால், மக்களின் வரிப்பணம் ஆண்டுதோறும், ரூ.30 கோடிக்கு மேல் விரயமாகிறது. நடந்தமுறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
இதற்கு மேலும் ஆளும் அரசு தவறு செய்த அதிகாரிகள், அலுவலகத்தில் உள்ளேயும், வெளியேயும் உள்ள போலி ரேஷன் அட்டை புரோக்கர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்த அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.