/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
59 ஏரிகளை புனரமைப்பது குறித்து டில்லியில் அமைச்சர் ஆலோசனை
/
59 ஏரிகளை புனரமைப்பது குறித்து டில்லியில் அமைச்சர் ஆலோசனை
59 ஏரிகளை புனரமைப்பது குறித்து டில்லியில் அமைச்சர் ஆலோசனை
59 ஏரிகளை புனரமைப்பது குறித்து டில்லியில் அமைச்சர் ஆலோசனை
ADDED : ஆக 18, 2024 04:14 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள, 59 ஏரிகளை புனரமைத்தல், நீர்நிலைகளை பாதுகாத்து இயக்குதல் தொடர்பாக டில்லியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், டில்லியில் உள்ள 'வாப்கோஸ்' தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் அகர்வாலுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் புதுச்சேரியில் உள்ள, 59 ஏரிகளை செப்பனிட்டு புதுப்பித்து புனரமைப்பு செய்து, அதன் கொள்ளளவை கூட்டி, குடிநீர் தேவை மற்றும் விவசாயப் பயன்பாடு பணிகளுக்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பது குறித்து, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசித்தார்.
இந்த திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெறுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்து இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆர்.ஆர்.ஆர் திட்டத்தின் கீழ், நிதி பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படும். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து விவசாய கால்வாய்களையும் கான்கிரீட்டால் வலுப்படுத்தவும், பி.எம்.கே.எஸ்.ஒய் 2, திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறுவதற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் அவர், வாப்கோஸ் நிறுவனத்தை கேட்டு கொண்டார்.
இதைத்தொடர்ந்து என்.ஆர்.சி.பி., திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் ஆற்றை சுத்தப்படுத்தி வலுப்படுத்தவும், காரைக்காலில் உள்ள அரசலாற்றை வலுப்படுத்த செப்பனிடவும், திட்ட மதிப்பீடு தயாரிக்க ஆய்வுகளை தொடங்கவும் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் உள்ள அரசாலாற்று நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நோக்கிலும் ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், நீர்ப்பாசனக் கோட்டத்தின் செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.