/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
/
அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 09, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனுார் மோகித் கன்ஸ்ட்ரக் ஷன் சார்பில், வி.தட்டாஞ்சாவடி பகுதியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
விழாவில் மோகித் கன்ஸ்ட்ரக் ஷசன் உரிமையாளர் ரவிக்குமார், பாலகிருஷ்ணன், முன்னாள் சேர்மன் பாலமுருகன், அன்பு, கணபதி, ரமேஷ், வேலாயுதம், அருள்முத்து, சிவராமன், ஜெயக்குமார், பாரதி, சுதர்சனன், சந்துரு, விஜயகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.