/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் அமைச்சக ஊழியர் சங்கம் எச்சரிக்கை
/
சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் அமைச்சக ஊழியர் சங்கம் எச்சரிக்கை
சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் அமைச்சக ஊழியர் சங்கம் எச்சரிக்கை
சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் அமைச்சக ஊழியர் சங்கம் எச்சரிக்கை
ADDED : ஜூலை 02, 2024 05:13 AM
புதுச்சேரி: கோரிக்கைகளை தீர்க்கவில்லையெனில் 2026 சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என, அமைச்சக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
புதுச்சேரி அரசு, உதவியாளர்களுக்கான துறை ரீதியான போட்டி தேர்வு நடத்தி முடிவை வெளியிட்டது. அதில் மதிப்பெண் வெளியிடவில்லை. மதிப்பெண் வெளியிடாவிட்டால் சி.பி.ஐ., விசாரணைக்கு கோருவோம் என தெரிவித்தோம்.
அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட பட்டியலில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெறவில்லை. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் யார் எத்தனை மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றனர். காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் யார் என, தெளிவாக வெளியிடவில்லை.
மூன்றாண்டுகளுக்கு ஒரே இடத்தில் இருப்பவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். சென்சியேட்டிவ் துறைகளில் இரண்டு ஆண்டுகள் இருந்தால் இடமாற்றம் செய்ய வேண்டும் என, மத்திய விஜிலென்ஸ் விதி கூறுகிறது.
புதுச்சேரியில் 54 அரசு துறைகள் இருகின்றன. இவற்றில் உள்ள அரசு ஊழியர்களை நிர்வாக சீர்த்திருத்த துறை இடமாற்றம் செய்கிறது.
சிறப்பாக செயல்பாடும் ஊழியர்களை சில ஆண்டுகள் தக்க வைக்க அரசு துறை தலைவர்கள் கோப்பு அனுப்புகின்றனர். ஆனால் நிர்வாக சீர்திருத்த துறையோ உடனடியாக அவர்களை அந்த துறையில் இருந்து விடுவிக்கிறது.
சென்சியேட்டிவ் துறையான நிர்வாக சீர்த்திருத்த துறையில் 12 முதல் 17 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி புரிகின்றனர். அவர்களை ஏன் இட மாற்றவில்லை.
அமைச்சக ஊழியர்கள் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. அமைச்சக ஊழியர்கள் கோரிக்கை தீர்க்காவிட்டால் 2026 சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.