தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மிஸ் கூவாகம்-2024 அழகிப்போட்டி: ஈரோடு ரியா முதலிடம்

மிஸ் கூவாகம்-2024 அழகிப்போட்டி: ஈரோடு ரியா முதலிடம்

மிஸ் கூவாகம்-2024 அழகிப்போட்டி: ஈரோடு ரியா முதலிடம்


ADDED : ஏப் 23, 2024 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம், : விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம்-2024 அழகிப்போட்டியில் ஈரோடு ரியா தேர்வானார்.

விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் 'மிஸ் கூவாகம் 2024 அழகிப் போட்டி நடந்தது.

விழுப்புரம் ஆஞ்சநேயா மண்டபத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு செயலாளர் கங்கா தலைமை தாங்கினார். சிந்து வரவேற்றார்.

அப்போது, மிஸ் கூவாகம்-2024 போட்டியில் பங்கேற்றோரை, ஒருங்கிணைப்பாளர் அருணா மற்றும் குழுவினர் நடுவராக இருந்து தேர்வு செய்தனர்.

அதில் முதல் சுற்றில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களின் நடை, உடை, பாவனை மூலம் 15 பேர், 2ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி திடலில் மிஸ் கூவாகம்-2024 கலை நிகழ்ச்சி மற்றும் மிஸ் கூவாகம் இறுதி சுற்று தேர்வு நடந்தது. அமைச்சர் பொன்முடி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், சேர்மன் தமிழ்ச்செல்வி, மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன் வாழ்த்தி பேசினர். சினிமா நடிகைகள் ரெபெக்கா, பிரமிளா, எதிர்நீச்சல் காயத்ரி முன்னிலை வகித்தனர்.

இறுதி சுற்றுக்கான முதல் சுற்று போட்டியில் துாத்துக்குடி மேகா, கோவை எமி, தஞ்சை ஜொஸ்மா, விருதுநகர் ரேணுகா, ஈரோடு ரியா, சென்னை யுவாஞ்சலின், சேலம் கதிஜா ஆகிய 7 பேர் தேர்வாகினர். இறுதியாக கேள்வி பதில் சுற்று நடந்தது.

அதில், ஈரோடு ரியா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.

2ம் இடத்தை துாத்துக்குடி மேகா, 3ம் இடத்தை சென்னை யுவாஞ்சலின் பிடித்தனர். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது. மூன்று பேருக்கும் கிரீடம் சூட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் மோகனாம்பாள் வரவேற்றார். அருணா, சுபிக்ஷா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

துணை தலைவர் விமலா நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us