ADDED : மே 30, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
உழவர்கரை நகராட்சி சார்பில், 2026–27ம் நிதியாண்டிற்கான, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலைகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இளநிலை பொறியாளர் சாந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
