தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியோருக்கு போர்வை எம்.எல்.ஏ., வழங்கல்

முதியோருக்கு போர்வை எம்.எல்.ஏ., வழங்கல்

முதியோருக்கு போர்வை எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஜூன் 20, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 09:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகளை நாராயணசாமி எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், முதியோர் உதவித்தொகை பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்களில் நடந்தது.

நிகழ்ச்சியில் நாராயணசாமி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயனாளிகளுக்கு போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினார். முதியோர்களின் நலன் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் தகுதியான அனைவருக்கும் சென்றடைய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us