தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசார் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் எம்.எல்.ஏ., புகார் மனு

போலீசார் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் எம்.எல்.ஏ., புகார் மனு

போலீசார் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் எம்.எல்.ஏ., புகார் மனு


ADDED : ஆக 05, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை போலீசாரின் செயல்பாடுகள் குறித்து விக்னேஷ் எம்.எல்.ஏ., முதல்வர் ரங்கசாமியிடம் புகார் மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது: 

ராஜ்பவன் தொகுதியின் பல்வேறு பகுதிகள் முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் அமைந்துள்ளது. அந்த போலீஸ் ஸ்டேஷனின் செயல்பாடுகள் சமீப காலமாக பொது மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

சட்டத்தை சமமாக அமல்படுத்தப்படாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் குறிவைக்கப்படுகின்றனர். இதனால், போலீசார் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுகிறது.

மேலும், உள்ளூர் கோவில் தொடர்பான விவகாரங்களில் தேவையற்ற தலையீடு செய்து, பதற்றமான சூழலை உருவாக்கும் வகையில் போலீசார் செயல்படுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. போலீசாரின் முதன்மை கடமை சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதும், பொது மக்களுக்கு பாரபட்சமின்றி நியாயமான முறையில் சேவையாற்றுவதும் தான்.

ஆனால், முத்தியால்பேட்டை போலீசாரின் தற்போதைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கிறது. போலீசாரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us