வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 24, 2026 04:50 PM
பாகூர்: பாகூர் மற்றும் கடுவனுார் கிராமத்தில், வாய்க்கால் துார்வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் கிழக்கு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட துாக்குபாலம் முதல் மணப்பட்டு ஏரி தாங்கள் வரையிலான சித்தேரி வாய்க்காலை 9 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயிலும், கடுவனுார் கிராம பஞ்சாயத்து சின்ன ஏரியை 11 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவிலும் துார்வாரி ஆழப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வாய்க்கால் மற்றும் ஏரி துார்வாரும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், பணி ஆய்வாளர் கணேசன், கிராம திட்ட ஊழியர் ரதிபாலன், அங்காளம்மாள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
