தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை மேம்பாட்டுப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை மேம்பாட்டுப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை மேம்பாட்டுப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 12, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட வம்புப்பட்டு கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் சாலை மேம்பாட்டுப் பணியை, அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிந்துரையில் பேரில், ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் சார்பில், திருபுவனை தொகுதி, வம்புப்பட்டு கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் சாலை மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை நடந்தது.

அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பேட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன், ஒப்பந்ததாரர் தட்சணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us