ADDED : ஜூலை 16, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: புதிதாக அமைக்கப்பட்ட மின் விளக்குகளை ராமு எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
கடலுார் சாலை, அரியாங்குப்பம் சிக்னல் முதல் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலம் வரை சென்டர் மீடியனில், புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணிகள் நிறைவடைந்து.
இந்நிலையில், அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இதன் துவக்க நிகழ்ச்சி நடந்தது. புதிய மின் விளக்குகளை ராமு எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், த.வெ.க., நிர்வாகிகள், மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
