/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ., காரில் சோதனை அரியாங்குப்பத்தில் பரபரப்பு
/
எம்.எல்.ஏ., காரில் சோதனை அரியாங்குப்பத்தில் பரபரப்பு
எம்.எல்.ஏ., காரில் சோதனை அரியாங்குப்பத்தில் பரபரப்பு
எம்.எல்.ஏ., காரில் சோதனை அரியாங்குப்பத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 13, 2024 04:25 AM
அரியாங்குப்பம்: பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு சேகரித்த எம்.எல்.ஏ., காரை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது, கட்சியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அரியாங்குப்பம் பகுதியில், தே.ஜ., கூட்டணி, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக, அந்தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., பாஸ்கர் கட்சி தொண்டர்களுடன் ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று, காலை, அரியாங்குப்பம் சொர்ணா நகரில் எம்.எல்.ஏ., கட்சி தொண்டர்களுடன் ஓட்டு சேகரித்தார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மற்றும் போலீசார் திடீரென எம்.எல்.ஏ., காரை திறந்து சோதனை செய்தனர். காரில் உள்ளே தண்ணீர் பாட்டில்கள், சாப்பாடு பொட்டலங்கள், துண்டு பிரசுரங்கள் இருந்தன.
அப்போது எம்.எல்.ஏ., காரை சோதனை செய்த அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு பொதுவாக சோதனை செய்வது எங்களது பணி என அதிகாரிகள் எம்.எல்.ஏ.,விடம் கூறினர்.
கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ,. ஆதரவாளர்கள், பறக்கும் படை அதிகாரிகளிடம், வெயில் நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர், சாப்பாடு கூட காரில் எடுத்து வரக்கூடாத என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகள் படிதான் அனைத்து வேட்பாளர்களின் வாகனத்தையும் சோதனை நடத்தி வருகிறோம் என, கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

