/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷ வாயு குறித்து எம்.எல்.ஏ., புகார் எதிரொலி; 5 துறைகளின் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
/
விஷ வாயு குறித்து எம்.எல்.ஏ., புகார் எதிரொலி; 5 துறைகளின் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
விஷ வாயு குறித்து எம்.எல்.ஏ., புகார் எதிரொலி; 5 துறைகளின் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
விஷ வாயு குறித்து எம்.எல்.ஏ., புகார் எதிரொலி; 5 துறைகளின் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
ADDED : ஜூலை 23, 2024 02:29 AM

புதுச்சேரி : புதுநகர் விஷ வாயு உருவாவதற்கு காரணம் என எம்.எல்.ஏ., சிவசங்கர் கூறிய இடத்தில், மாசு கட்டுப்பாட்டு குழுமம் உள்ளிட்ட 5 துறை இணைந்து நேற்று ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கடந்த மாதம் 11ம் தேதி பாதாள சாக்கடை வழியாக உருவான விஷவாயு தாக்கி பள்ளி சிறுமி உட்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கனகன் ஏரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷவாயு வெளியேறியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். வீட்டின் கழிப்பறைகளில் வாட்டர் சீல் எனப்படும் எஸ் மற்றும் பி டிராப் பொருத்ததால் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எஸ், பி., டிராப் பொருத்தினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கடும் துர்நாற்றம் எழுந்ததால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் மூலக்குளம் குண்டு சாலை பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனியார் நிலத்தில் 10 போர்வெல் அமைத்து, வெளிமாநில டேங்கர் லாரிகள் மூலம் கழிவுகள் கொண்டு வந்து போர்வேல் மூலம் பூமிக்கு அடியில் செலுத்துகின்றனர். குழாய் வழியாகவும் பாதாள சாக்கடையில் சேர்க்கின்றனர். அதனை ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார்.
எம்.எல்.ஏ., சிவசங்கர் தெரிவித்த தனியார் இடத்தில், புதுச்சேரி மாசு கட்டுப் பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், புதுச்சேரி நிலத்தடி நீர் ஆதார அமைப்பின் உறுப்பினர் செயலர் மனோகர், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், பொதுப்பணித்துறை சார்பில் உதவி பொறியாளர் வைத்தியநாதன், சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானி ருக்மணி, உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் சிவக்குமார் தலைமையில் 5 துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
4 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் கட்டடம் கட்டுவதிற்காக 5 இடங்களில், மண் பரிசோதனை செய்ய 6 மீட்டர் ஆழத்திற்கு போர் போன்று அமைத்து மண் எடுக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளத்தில் இருந்து மண் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. அதுபோல், தனியார் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த போர்வெல்லில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டது. மாதிரிகள் சோதனை செய்தபோது, எந்தவிதமான வேதி பொருட்களும் கலக்கப்படவில்லை என தெரியவந்தது.