தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டம் இன்ட்ரஸஸ்ட் பத்துக்கண்ணு பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு 

பட்டம் இன்ட்ரஸஸ்ட் பத்துக்கண்ணு பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு 

பட்டம் இன்ட்ரஸஸ்ட் பத்துக்கண்ணு பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு 


ADDED : ஜூன் 26, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார், ஜூன் 27– பத்துக்கண்ணு பகுதியில் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஊசுடு தொகுதியில்  காங்., சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.  அதனையொட்டி ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

முன்னதாக கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்து,  தனது அறையில் அமர்ந்து மக்கள் நலத்திட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.

மேலும் அலுவலக திறப்பு விழாவில் நேயம் மக்கள் கட்சி தலைவர் நேரு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி,  முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், வைத்தியநாதன்,  ஊசுடு தொகுதி காங்., நிர்வாகிகள் சங்கர்பாபு, செந்தில்குமார்,  லோகையன், பாபு, கணேஷ் ஆனந்த், ராமதாஸ் சேட்டு உளு்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us