தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகை கடையில் நுாதன மோசடி

நகை கடையில் நுாதன மோசடி

நகை கடையில் நுாதன மோசடி


ADDED : மார் 29, 2024 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் நகை வாங்கி கொண்டு ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக ஏமாற்றி சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சிம்னாரம்;42; இவரது கடைக்கு கடந்த 7ம் தேதி 35வயது மதிப்புள்ள டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்தார். 1 சவரன் தங்க நகை வாங்கினார். அதற்கான பணத்தை வேறு ஒரு நபர் மூலம் ஜிபே அனுப்பியுள்ளதாக தவறான குறுச்செய்தியை கடைகாரரிடம் காட்டி நகையை வாங்கிச் சென்றார். .

பின்னர் கடை உரிமையாளர், தனது மொபைல் ஜி.பே.,வில் பார்த்த போது, பணம் வராமல் இருந்துள்ளது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us