/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறைந்த வட்டிக்கு கடன் என நுாதன மோசடி; 8 பேரிடம் ரூ.8.25 லட்சம் 'அபேஸ்'
/
குறைந்த வட்டிக்கு கடன் என நுாதன மோசடி; 8 பேரிடம் ரூ.8.25 லட்சம் 'அபேஸ்'
குறைந்த வட்டிக்கு கடன் என நுாதன மோசடி; 8 பேரிடம் ரூ.8.25 லட்சம் 'அபேஸ்'
குறைந்த வட்டிக்கு கடன் என நுாதன மோசடி; 8 பேரிடம் ரூ.8.25 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 29, 2024 06:29 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் எட்டு பேரிடம் 8.25 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டியில் பணம் வாங்கி தருகிறோம் என, கூறினார்.
அதை நம்பி அப்பெண் தன்னுடைய அனைத்து ஆவணங்கள், ஆதார், வங்கி தகவல்களை கொடுத்தார். 7 லட்சம் ரூபாய் கடன் பெற, 82 ஆயிரம் ரூபாய் செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறியுள்ளார். அதை நம்பி அப்பெண் 82 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார்.
இது தொடர்பாக அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுபோல் மற்றொரு பெண்ணிடம் 60 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.
மூலக்குளம் பகுதியை சேர்ந்த பழனிகுமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால், பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்.
அதனை நம்பி ரூ.5.9 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். திருக்கனுார் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறியதை நம்பி, 2.50 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.
அரியாங்குப்பம் பிரவீன் என்பவரிடம் பகுதி நேர வேலை தேடி 30 ஆயிரம் ஏமாந்தார். கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு வங்கியில் இருந்த போலி எஸ்.எம்.எஸ்., லிங்க் ஒப்பன் செய்து வங்கி கணக்கு விபரங்களை பதிவிட்டார். அடுத்த சில நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 49 ஆயிரம் எடுக்கப்பட்டது.
குண்டுபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய், லாஸ்பேட்டை பிரக்யா இணையதளத்தில் கட்டுரை வெளியிடுவது தொடர்பாக 50 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டது.
இது குறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'குறைந்த வட்டிக்கு பணம் தருகிறேன். வேலை வாங்கி தருகிறேன்.
வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறும் எந்த அழைப்புகளை நம்பி பொது மக்கள் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என, தெரிவித்தனர்.