/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாதன முறையில் ஸ்கூட்டர் திருட்டு; கள்ளக்குறிச்சி ஆசாமி கைது
/
நுாதன முறையில் ஸ்கூட்டர் திருட்டு; கள்ளக்குறிச்சி ஆசாமி கைது
நுாதன முறையில் ஸ்கூட்டர் திருட்டு; கள்ளக்குறிச்சி ஆசாமி கைது
நுாதன முறையில் ஸ்கூட்டர் திருட்டு; கள்ளக்குறிச்சி ஆசாமி கைது
ADDED : செப் 02, 2024 06:49 AM

புதுச்சேரி: பேக் ஆர்டர் கொடுப்பதாக கூறி, நுாதன முறையில் ஸ்கூட்டரை திருடிச் சென்ற தமிழக ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அரியூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அமீர்தீன், 55; இவர், சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி, தம்பு நாயக்கர் வீதி சந்திப்பில், பேக் கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், 15 ஸ்கூல் பேக் வேண்டும் எனவும், ஒரு மணி நேரம் கழித்து கடைக்கு வந்து வாங்கி கொள்வதாக கூறி ஆர்டர் கொடுத்தார். பேக் வாங்குவதற்கான பணத்தை ஏ.டி.எம்., மிஷினில் எடுத்துவர ஸ்கூட்டரை கேட்டார். அவரது கடையில் வேலை செய்யும் வெங்கடேசன் என்பவரை துணைக்கு அனுப்பி ஸ்கூட்டர் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஸ்கூட்டரை வாங்கி சென்ற நபர், உடன் வந்த வெங்கடேசனை லப்போர்த் வீதியில் இறக்கி விட்டு மாயமானார். இது தொடர்பாக 31ம் தேதி பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி, விஜயபுரம், முதல் தெருவைச் சேர்ந்த செக்யூரிட்டி டேனியல்பாபு, 53; ஸ்கூட்டரை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் டேனியல் பாபுவை கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது செஞ்சி, கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டு வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட டேனியல் பாபவை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.