/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி மூலகுளம், கோரிமேடு அணிகள் வெற்றி
/
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி மூலகுளம், கோரிமேடு அணிகள் வெற்றி
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி மூலகுளம், கோரிமேடு அணிகள் வெற்றி
பிரீமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி மூலகுளம், கோரிமேடு அணிகள் வெற்றி
ADDED : ஆக 25, 2024 05:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பாண்டிச்சேரி பக்கா பிரீமியர் டி-20 லீக் மற்றும் நாக்கவுட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி போலீஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதில், கோரிமேடு பேந்தர்ஸ், திருவண்டார் கோவில் டைட்டன்ஸ், குமாரபாளையம் வாரியர்ஸ், வீராம்பட்டினம் ஷார்க்ஸ், உருளையன்பேட் டைகர்ஸ், உப்பளம் ராயல்ஸ், லாஸ்பேட் லிஜன்ஸ், மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் ஆகிய எட்டு உள்ளூர் அணிகள் விளையாடுகின்றன.
முதல் பரிசாக ரூ. 7 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 4 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம், நான்காவது பரிசாக ரூ. 2 ஆயிரம், சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூ. 5 ஆயிரம், சிறந்த பேட்ஸ்மேன், பவுலருக்குரூ. 2,500, சிறந்த பீல்டருக்கு ரூ.1,500, இறுதிப்போட்டி ஆட்ட நாயகனுக்கு ரூ. 1,500,மற்றும் அனைத்து போட்டியிலும் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அனைத்து அணிகளும் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியுடன் மோதி முதலில் வரும் நான்கு அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்று துவங்கிய முதல் போட்டியில், திருவண்டார்கோவில் டைட்டன்ஸ், மூலகுளம் கிளாடியேட்டர் அணிகள் மோதின. போட்டியை அக் ஷதா பிக் கேபிட்டல்இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிட்., நிறுவனர் அரிதாஸ் துவக்கி வைத்தார்.
முதலில் பேட் செய்த, திருவண்டார்கோவில் டைட்டன்ஸ்அணி 18 ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது. சாமுவேல் 34 ரன்கள் எடுத்தார். மூலக்குளம் கிளாடியேட்டர் அணியின் மணிமாறன் 6 விக்கெட் எடுத்தார்.
பின் களமிறங்கிய மூலகுளம் கிளாடியேட்டர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழுந்து 99 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோனிஷ் 49 ரன்கள் எடுத்தார். மூலகுளம் கிளாடியேட்டர் அணியின் மணிமாறன்ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இரண்டாவது போட்டியில் கோரிமேடு பேந்தர், லாஸ்பேட் லிஜன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய லாஸ்பேட் லிஜன்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. செந்தில் குமரன் 43 ரன்களை குவித்தார்.
கோரிமேடு பேந்தர் அணியின் சபரி, ரமேஷ் தலா மூன்று விக்கெட்கள் எடுத்தனர்.
பின் களம் இறங்கிய கோரிமேடு பேந்தர் கிரிக்கெட் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. அந்த அணியின் சபரி 40 ரன், பிரபு 45 ரன்கள் எடுத்தனர். சபரி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஏற்பாடுகளை டோர்னமென்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.