/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டையில் கொசு மருந்து தெளிப்பு
/
லாஸ்பேட்டையில் கொசு மருந்து தெளிப்பு
ADDED : பிப் 24, 2025 04:22 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை, முன்னாள் சபாநாயகர் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் கொசு மூலம் பரவும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் கொசு மருந்து தெளித்தனர். நகராட்சி மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
லாஸ்பேட்டை தொகுதியில், கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக, பொதுமக்களிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து, சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர், தங்கள் சொந்த செலவில், கொசு மருந்து தெளிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள நேதாஜி சிலை அருகே கொசு மருந்து தெளிக்கும் பணியை முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து துவக்கி வைத்தார்.
சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

