/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், தங்கையுடன் வாலிபர் கைது
/
திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், தங்கையுடன் வாலிபர் கைது
திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், தங்கையுடன் வாலிபர் கைது
திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், தங்கையுடன் வாலிபர் கைது
ADDED : மே 05, 2024 03:38 AM
புதுச்சேரி : திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் அவரது தாய், தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். தனியார் பல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பல் மருத்துவமனை அருகில் பழக்கடை நடத்தி வந்த வாழைக்குளம், நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்த அருண் (எ) பாலமுருகன், 28; அப்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள அப்பெண்ணை வலியுறுத்தி வந்தார்.
சில நாட்களுக்கு முன், அருண் அவரது தாய் சித்ரா, தங்கை பரமேஸ்வரி ஆகியோருடன் சென்று பெண் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. அப்போது மூவரும் சேர்ந்து அப்பெண்ணை தாக்க முயன்றனர். அருண் தனது மார்பில் அப்பெண்ணின் பெயரை பச்சை குத்தி, அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து கொள்வேன் என, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அப்பெண் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அருண், சித்ரா, பரமேஸ்வரி ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், மானபங்கம் செய்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அருண் காலாப்பட்டு சிறைக்கு அனுப்பட்டார். மற்ற இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.