ADDED : ஜூலை 20, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து மகன் போலீசில் புகார் செய்தார்.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி ருக்குமணி,60; கூலி தொழிலாளி. பள்ளியில் படிக்கும் தனது இரு குழந்தைகளை, கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து அழைத்து சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரததால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மூத்த மகன் குரு கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் பேலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
