ADDED : ஆக 27, 2024 04:15 AM

புதுச்சேரி அரசு சார்பில், மதர் தெரசா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சட்டசபை எதிரே பாரதி பூங்காவில் அமைந்துள்ள மதர் தெரசா சிலைக்கு சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
காங்., கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துணைத் தலைவர் அனந்தராமன், காங்., வக்கீல் அணி செயலாளர் மருதுபாண்டியன், மாநில காங்., செயலாளர் சூசைராஜ் உள்ளிட்டோர் மதர்தெரசா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு சமூக அமைப்பினர் மதர் தெரசாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.