ADDED : பிப் 22, 2025 01:04 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அன்னையின் 147வது பிறந்த நாளையொட்டி, அரவிந்தர் மற்றும் அன்னையின் அறையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அன்னை என்று அழைக்கப்படும் மிரா அல்பாஸா 1878ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே அவர் தங்கி, அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார்.
மேலும், அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை 1973ம் ஆண்டு நவ.17ம் தேதி மகா சமாதி அடைந்தார். அன்னையின்147வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நேற்று காலை ஆசிரம வாசிகளில் கூட்டு தியானம் நடந்தது. அதை தொடர்ந்து, அன்னை மற்றும் அரவிந்தர் அறையை பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
மேலும், அன்னை உருவாக்கிய ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்ரி மந்திர் ஆம்பி தியேட்டரில் நேற்று காலை 5:00 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது. அதில், ஆரோவில் வாசிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.

