/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாகன விபத்து இழப்பீடு வழக்கு; கண்காணிக்க குழு அமைப்பு
/
வாகன விபத்து இழப்பீடு வழக்கு; கண்காணிக்க குழு அமைப்பு
வாகன விபத்து இழப்பீடு வழக்கு; கண்காணிக்க குழு அமைப்பு
வாகன விபத்து இழப்பீடு வழக்கு; கண்காணிக்க குழு அமைப்பு
ADDED : செப் 07, 2024 07:00 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, புதுச்சேரியில், இந்த வழக்குகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட குழுவின் கன்வீனராக சட்டசேவை ஆணைய முதன்மை சார்பு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இழப்பீடு விசாரணை அதிகாரியாக துணை கலெக்டர், உறுப்பினராக போக்குவரத்து எஸ்.பி., ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதேபோல, காரைக்கால் மாவட்ட அளவிலான குழுவின் கன்வீனராக, சட்ட சேவை ஆணை முதன்மை சார்பு நீதிபதியும், இழப்பீடு விசாரணை அதிகாரியாக காரைக்கால், திருநள்ளாறு தாசில்தார்கள், காரைக்கால் போக்குவரத்து எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவானது, 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விபத்து வழக்குகள் மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்கும். இழப்பீடு விசாரணை அதிகாரி உரிய ஆவணங்களுடன், விசாரணை அறிக்கையை இழப்பீட்டு ஆணையருக்கு அனுப்ப வேண்டும். கண்காணிப்பு குழுவின் கன்வீனர் காலாண்டிற்கு ஒரு முறை கண்காணிப்பு குழுவின் நடவடிக்கை குறித்து, சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இதற்கான உத்தரவினை, சட்டத்துறை செயலாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.