தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திரா சதுக்கம் – மரப்பாலம் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி  

இந்திரா சதுக்கம் – மரப்பாலம் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி  

இந்திரா சதுக்கம் – மரப்பாலம் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி  


ADDED : ஜூன் 21, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 09:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா சதுக்கம் – மரப்பாலம் 100 அடி சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுச்சேரி இந்திரா சதுக்கம் – மரப்பாலம் 100 அடி சாலை வழியாக கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பைக், கார், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் பைக், வேன், சுற்றுலா வாகனங்கள் போதிய அனுமதியின்றி சாலைகளை ஆக்கிரமித்து பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. வீடுகள் மற்றும் வணிக வளாக கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொக்லைன், கான்கிரீட் கலவை இயந்திரங்கள் உள்ளிட்டவைகளும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. 

இதனால், சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் சாலை ஆக்கிரமிப்புகளால் விபத்துகளும் நடக்கிறது.

எனவே, போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இந்திரா சதுக்கம் – மரப்பாலம் சந்திப்பு வரையில் சாலையோர ஆக்கிரமிப்பில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்களை அகற்றுவதுடன், விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us