/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புதிய சட்டங்களின்படி முதலியார்பேட்டையில் முதல் எப்.ஐ.ஆர்.,
/
புதுச்சேரியில் புதிய சட்டங்களின்படி முதலியார்பேட்டையில் முதல் எப்.ஐ.ஆர்.,
புதுச்சேரியில் புதிய சட்டங்களின்படி முதலியார்பேட்டையில் முதல் எப்.ஐ.ஆர்.,
புதுச்சேரியில் புதிய சட்டங்களின்படி முதலியார்பேட்டையில் முதல் எப்.ஐ.ஆர்.,
ADDED : ஜூலை 02, 2024 04:59 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிய சட்டத்தின்படி, முதலியார்பேட்டையில் முதல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி, புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
கடந்த 1860ல் கொண்டு வரப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தில் (ஐ.பி.சி.) இருந்த 511 பிரிவுகளில் 153 பிரிவுகள் நீக்கப்பட்டு, 358 புதிய பிரிவுகளுடன் பாரதிய நியாய சன்ஹிதா என புது சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதுபோல் கடந்த 1870ம் ஆண்டு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (சி.ஆர்.பி.சி.) இருந்த 484 பிரிவு தற்போது பாரதிய நாக்ரிக் சுரக் ஷா சன்ஹிதா பெயரில் மாற்றம் செய்து 531 பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 1872ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம், பாரதிய சக் ஷிய அதிநிய என மாற்றப்பட்டு, 167 பிரிவுகளுக்கு பதில் 170 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று அதிகாலை 12:00 மணி முதல் அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தின்படி, புதுச்சேரியில் முதல் எப்.ஐ.ஆர்., முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டது.
ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, புதுச்சேரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் செய்த 52 பேரை முதலியார்பேட்டை போலீசார் பாரதிய நாக்ரிக் சுரக் ஷா சன்ஹிதா 170 பிரிவின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.