/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசே சம்பளம் வழங்க நகராட்சி கொம்யூன் ஊழியர்கள் போராட்டம்
/
அரசே சம்பளம் வழங்க நகராட்சி கொம்யூன் ஊழியர்கள் போராட்டம்
அரசே சம்பளம் வழங்க நகராட்சி கொம்யூன் ஊழியர்கள் போராட்டம்
அரசே சம்பளம் வழங்க நகராட்சி கொம்யூன் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஆக 02, 2024 01:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசே நேரடியாக சம்பளம், பென்ஷன் வழங்க வேண்டும் என நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்ட குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது. அதன்படி, நேற்று அண்ணாசாலை எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனந்த் கணபதி தலைமை தாங்கினார். சாகாயராஜ், மன்னாதன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலியபெருமாள், வேளாங்கண்ணிதாசன், ராஜேந்திரன், தங்கராசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சிவா, அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் கண்டன உரையாற்றினர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷனை புதுச்சேரி அரசே நேரடியாக வழங்க வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை 01.01.2016 முதல் அமல்படுத்தி நிலுவை தொகையை வழங்கிட வேண்டும். 2004 ஆண்டிற்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த இ.பி.எப்., தொகையை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்திட உள்ளாட்சி துறைக்கு உத்தரவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக வரும் 6ம் தேதி உள்ளாட்சி துறை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.