/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலை சந்திக்க முன் வர வேண்டும்: முதல்வருக்கு அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
/
சட்டசபை தேர்தலை சந்திக்க முன் வர வேண்டும்: முதல்வருக்கு அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
சட்டசபை தேர்தலை சந்திக்க முன் வர வேண்டும்: முதல்வருக்கு அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
சட்டசபை தேர்தலை சந்திக்க முன் வர வேண்டும்: முதல்வருக்கு அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2024 06:43 AM

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி தனது, கட்சி எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க முன் வர வேண்டும் என, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கடந்த, 3 ஆண்டுகளாக, என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளிடையே இணக்கமான சூழல் உருவானதாக தெரியவில்லை. உச்சகட்டமாக, தற்போது நிலவி வரும் உள்கட்சி பூசலால், அரசு நிர்வாகமே முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.
பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே சில அமைச்சர்களின், செயல்பாடுகள் உள்ளன.
சட்டசபை கூட்டத்தொடரை, ஆளும் அரசு முழுமையாக நடத்த முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு புறம் ஆட்சி கவிழ்ந்தால், முதல்வருக்கு, ஆதரவு அளித்து ஏதாவது செய்யலாமா என்று தி.மு.க., காங்., கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதல்வருக்கு பலமுறை ஆசை வார்த்தைகளையும், கூறி உள்ளனர்.
மேலும் என்.ஆர்.காங்., பா.ஜ., உள் ஆட்சி பூசலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முதல்வரை, சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
முதல்வர் ரங்கசாமி, ஜனநாயக முறைப்படி மனசாட்சியோடு சிந்தித்து, தங்களது கட்சியின் 10 எம்.எல்.ஏ.,க்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க முதல்வர் முன் வர, வேண்டும். அப்போது தான் குறுக்கு வழியில் வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில இணைச்செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.