ADDED : மே 21, 2026 08:31 PM
திருக்கனுார்: வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில், சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 14ம் தேதி ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது.
இதையொட்டி, முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல், சிவன்– பார்வதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் அபிேஷகம், மலர்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக முத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
