/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
/
முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED : ஜூன் 04, 2024 04:21 AM
திருக்கனுார் : செட்டிப்பட்டு முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் வரும் 7ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்து மாரியம்மன், கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, இன்று (4ம் தேதி) பகாசூரன் அன்னம் எடுத்தல் நிகழ்ச்சியும், வரும் 7ம் தேதி முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவமும், 9ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.