தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மியாட் சிறப்பு மருத்துவர் 6ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை

மியாட் சிறப்பு மருத்துவர் 6ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை

மியாட் சிறப்பு மருத்துவர் 6ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை


ADDED : ஜூலை 03, 2024 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் வரும் 6ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலுாரில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் இருதயவியல் சிறப்பு மருத்துவர் மணிகண்டன், வரும் 6ம் தேதி கடலுார் ஆற்காடு மருத்துவமனையில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

தொடர்ந்து மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் ஆலோசனை வழங்குகிறார்.

இதில், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட இருதய அறுவை சிகிச்சை, திறந்த நிலை இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், சீரற்ற இதயத் துடிப்புக்கான ஊறு நீக்கம், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்டிங் சிகிச்சை அளிக்க உள்ளார். மேலும் மார்பு வலி, அசவுகரியம், வியர்த்தல், சோர்வு, மூச்சு திணறல், படபடப்பு, பாதம், இடுப்பு அல்லது அடிவயிற்றில் அசாரதாரண வீக்கம், ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, தட்டையாக படுத்து கொள்வதில் சிரமம், இருதய நோய் கொண்ட குடும்ப வரலாறு உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.

இரண்டாவது கருத்தைப் பெற அல்லது வழக்கமான பரிசோதனை செய்ய விரும்புவர்களும் வந்து ஆலோசனை பெறலாம். முகாமில் பங்கேற்க வருவோர் முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வர வேண்டும்.

முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம் ரூ.300. முன்பதிவுக்கு 75400 44741 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us