sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாயமான அரசு பள்ளி மாணவன் மீட்பு 

/

மாயமான அரசு பள்ளி மாணவன் மீட்பு 

மாயமான அரசு பள்ளி மாணவன் மீட்பு 

மாயமான அரசு பள்ளி மாணவன் மீட்பு 


ADDED : ஏப் 13, 2024 04:31 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: கொடாத்துாரில் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்று, மாயமான மாணவரை போலீசார் மீட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருக்கனுார் அடுத்த கொடாத்துார் புதுநகர் சேர்ந்தவர் சுரேஷ், இறந்து விட்டார். இவரது மகன் ரெனித்குமார், 13. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ரெனித்குமார், வகுப்பிற்கு செல்லாமல் வெளியே சுற்றி வந்துள்ளார்.

இதையடுத்து, அவரது தாய் கோவிந்தம்மாள் கடந்த 10ம் தேதி பள்ளிக்கு சென்று மகன் வகுப்பறை உள்ளாரா என விசாரித்தார். இதையறிந்த ரெனித்குமார் மீண்டும் வீட்டிற்கு சென்றால் தாய் கண்டிப்பார் என்பதால் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து ரெனித்குமாரை தேடி வந்தனர். புதுச்சேரி பஸ் நிலயம் அருகே ரெனித்குமார் சுற்றிதிரிவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரெனித்குமாரை மீட்டு, ஸ்டேஷன் அழைத்து வந் தனர். அவருக்கு அறிவுரைகள் வழங்கி தாய் கோவிந்தம்மாளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us