தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாயமான தனியார் லோக்கல் டி.வி., உரிமையாளர் உடல் கரை ஒதுங்கியது

மாயமான தனியார் லோக்கல் டி.வி., உரிமையாளர் உடல் கரை ஒதுங்கியது

மாயமான தனியார் லோக்கல் டி.வி., உரிமையாளர் உடல் கரை ஒதுங்கியது


ADDED : செப் 14, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான தனியார் லோக்கல் டி.வி., சேனல் உரிமையாளர், இறந்த நிலையில் குருசுக்குப்பம் கடற்கரையில் உடல் கரை ஒதுங்கியது.

புதுச்சேரி ஆனந்த ரங்கப்பிள்ளை நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரசாத்ராவ் (எ) ராவ், 57; ஸ்கேட்டிங் சங்க பொறுப்பாளர். ஈஸ்வரன் கோவில் வீதியில் லோக்கல் டி.வி.,சேனல் ஒன்று நடத்தி வந்தார்.

இவரது மனைவி பத்மஜா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சரியான துாக்கம் இன்றி அவதிப்பட்டு ராவ் இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனது லோக்கல் டி.வி.சேனல் அலுவலகத்திற்கு சென்ற ராவ் மதியம் வீட்டிற்கு வரவில்லை.

அவரது அலுவலகத்திற்கு குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, தனது ஸ்கூட்டரை அலுவலகத்தில் நிறுத்தி விட்டு வெளியே சென்றது தெரியவந்தது.

பல இடங்களில் தேடியும் ராவ் கிடைக்காததால், அவரது மகள் பெரியகடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை குருசுக்குப்பம் சர்ச் எதிரில் கடற்கரை பாறைகள் மீது இறந்த நிலையில் ராவ் உடல் கரை ஒதுங்கி இருந்தது. பெரியக்கடை போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடலில் இறங்கி குளிக்கும்போது கடல் அலையில் சிக்கி ராவ் உயிரிழந்தரா அல்லது தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us