/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டூ-வீலரை திருடி உதிரி பாகங்கள் விற்பனை மர்ம கும்பல் அட்டகாசம் அதிகரிப்பு

ADDED : மே 10, 2024 06:05 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் டூ-வீலர்களை திருடி தனித்தனியாக உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரியில், கடந்த சில வாரங்களாக டூ-வீலர் திருட்டு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் வீட்டின் முன்பாக அல்லது சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடி சென்று விடுகின்றனர்.
இவ்வாறு திருடி செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை மாற்றி, குறைந்த விலைக்கு விற்கின்றனர்.
அதுமட்டுமின்றி, திருடி செல்லும் வாகனங்களின் உதிரி பாகங்களை, சில மணி நேரங்களிலேயே, தனித்தனியாக கழற்றி, பழைய இரும்பு கடைகளில், விற்று விடுகின்றனர்.
இன்னும் சிலர் டூ-வீலர்களை முழுவதுமாக, உருவ மாற்றம் செய்து, அவர்கள் தங்கள் உபயோகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், சி.சி.டி.வி, இல்லாததை பயன்டுத்தி, மர்ம நபர்கள் திருட்டு செயலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.