/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணியை மறு பரிசீலனை செய்ய என்.ஆர். இலக்கிய பேரவை கோரிக்கை
/
கூட்டணியை மறு பரிசீலனை செய்ய என்.ஆர். இலக்கிய பேரவை கோரிக்கை
கூட்டணியை மறு பரிசீலனை செய்ய என்.ஆர். இலக்கிய பேரவை கோரிக்கை
கூட்டணியை மறு பரிசீலனை செய்ய என்.ஆர். இலக்கிய பேரவை கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 06:17 AM
புதுச்சேரி : 'பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என முதல்வருக்கு, என்.ஆர். இலக்கிய பேரவைத் தலைவர் தனசேகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. என்.ஆர். காங்., வரும் சட்டசபை தேர்தலில் தனித்தே களம்கண்டாலும், அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இப்படி இருக்கக்கூடிய அரசியல் சூழலில், அவரை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தங்கள் வெற்றிக்கு அடி போட நினைக்கின்றார்கள். மேலும் தங்களை அதிகாரப்படுத்திக் கொள்ளமுயல்கிறார்கள்.
கூட்டணிக்கட்சியினர், சுயேச்சைகளை நம்பி, கட்டை விரலாக திகழும் என்.ஆர். காங்கிரசை வசை பாடுவது என்பது நுனிக்கிளையில்அமர்ந்து அடி கிளையை வெட்டுவது போல் உள்ளது.
இன்று டில்லி சென்று முதல்வர் மீது புகார் செய்யும் நபர்கள், நம் கூட்டணிக்கு தேர்தலில் எவ்வாறு பணியாற்றி இருப்பார்கள் என்றே நினைக்க தோன்றுகின்றது.
பா.ஜ., கூட்டணி குறித்து, முதல்வர் மறு பரிசீலனை செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.