/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நோட்டீஸ் வழங்கி பிரசாரம்
/
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நோட்டீஸ் வழங்கி பிரசாரம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நோட்டீஸ் வழங்கி பிரசாரம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நோட்டீஸ் வழங்கி பிரசாரம்
ADDED : ஏப் 10, 2024 02:01 AM

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஓட்டு சேகரித்தார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாம் தமிழ் கட்சி வேட்பாளர் டாக்டர் மேனகா நேற்று, முதலியார்பேட்டை தொகுதி, மரப்பாலம், வசந்தம் நகர், நைனார்மண்டபம், சுதானா நகர், அரவிந்தர் நகர், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, கட்சியினர் தேர்தல் பிரசார நோட்டீஸ் வழங்கினர்.
அதில், புதுச்சேரிக்கு தனி மாநில உரிமை, மூடப்பட்ட பஞ்சாலைகளை இயக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி, போதை பொருட்களை ஒழித்து, புதுச்சேரியிலி மது கலாச்சாரத்தை அகற்றிட, மைக் சின்னத்தில் ஓட்டளிக்கவேண்டும் என பிரசாரம் செய்தார்.