/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருவரிடம் நுாதன மோசடி மர்ம கும்பலுக்கு வலை
/
இருவரிடம் நுாதன மோசடி மர்ம கும்பலுக்கு வலை
ADDED : ஜூன் 04, 2024 04:23 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் 2 பேரிடம் 19.5 ஆயிரம் நுாதன மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல், மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு மொபி விக் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன் என கூறினார். சேவை தொடர்பாக, அவரது வங்கி விபரங்கள் உள்ளிட்டவை கொடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டது.
அதே போல, நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன், மர்ம நபர் வேலை தொடர்பாக, பேசி, அவரிடமிருந்து 17 ஆயிரம் பணத்தை ஏமாத்தியுள்ளார். மேலும், காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த ஆனந்தன் இவரது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, இணைய தளத்தில் வெளியிடுவதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த சேம்சன் என்பவர் லோன் ஆப் மூலம் பெற்ற லோனை முழுமையாக அடைத்துள்ளார். அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து, புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.