ADDED : ஆக 08, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாரத்தில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நடந்தது.
சாரத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், ஆடிப்பூரம் விழா நடந்தது. அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, அம்மன் வளையல் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன், உபயதாரர் தணிகைவேல், அர்ச்சகர் முத்துக்குமாரசாமி செய்திருந்தனர்.