ADDED : மே 26, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தில் வினாயகர், பாலமுருகன், மாரியம்மன், கலியுகபெருமாள், காளிகாதேவி பூரணி புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் 7ம் ஆண்டு திருவிழா தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மாரியம்மன் கோவிலில் கரகம் ஜோடித்து வீதியுலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 7:30 மணிக்கு கலியுகபெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது.
இன்று 26ம் தேதி காலை 7:00 மணிக்கு ஏரிக்கரையில் உள்ள காளிகாதேவி கோவிலில் இருந்து கரகம் வீதியுலா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.