/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதி பார்த்தசாரதி கோவிலில் நாம சங்கீர்த்தனம்
/
திரவுபதி பார்த்தசாரதி கோவிலில் நாம சங்கீர்த்தனம்
ADDED : ஏப் 15, 2024 04:59 AM

புதுச்சேரி : தமிழ்ப்புத்தாண்டையொட்டி, லாஸ்பேட்டை திரவுபதி பார்த்தசாரதி
கோவிலில் நாம சங்கீர்த்தனம் நடந்தது.
லாஸ்பேட்டையில், திரவுபதி அம்மன் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் ஆராதனை நடந்தன.
இதைத்தொடர்ந்து மாலை 6:45 மணிக்கு கோலாகல 'நாம சங்கீர்த்தனம்' நடந்தது. இறைவனை அடைய பாதை வகுக்கும் பக்தி மார்க்கங்களில், நாம சங்கீர்த்தனம், மிக முக்கியமானதாக உள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த காயத்ரி மகேஷ் குழுவினர் பங்கேற்று, பெருமாளின் திருநாமங்களை பாடினர். இதற்கான ஏற்பாடுகளை, பாண்டுரங்க பஜன் சமாஜ் மேற்கொண்டது.

