/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறையை தனியாருக்கு விற்க நமச்சிவாயம் திட்டம் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
/
மின்துறையை தனியாருக்கு விற்க நமச்சிவாயம் திட்டம் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
மின்துறையை தனியாருக்கு விற்க நமச்சிவாயம் திட்டம் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
மின்துறையை தனியாருக்கு விற்க நமச்சிவாயம் திட்டம் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 02, 2024 05:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை, ரூ.1000 கோடிக்கு தனியாருக்கு விற்க, பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் திட்டமிட்டுள்ளதாக, காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட, பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அங்கு வைத்திலிங்கம் பேசியதாவது:
புதுச்சேரியில் மின்துறையை, விற்று சிலர் காசு பார்க்க நினைக்கின்றனர். மொத்தம், 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள, அந்த சொத்தை 1000 கோடி ரூபாய்க்கு, அம்பானிக்கும், அதானிக்கும் விற்க திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான முயற்சியை, பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடியின் உத்தரவால், அவர் அந்த செயலில் ஈடுபட்டு வருகிறார். காரைக்கால் துறைமுகம் அதானிக்கு கொடுக்கப்பட்டு விட்டது.
புதுச்சேரியில் மின் துறையை தனியாருக்கு விற்கக்கூடாது. அவ்வாறு விற்று விட்டால், இப்போது அதிகரித்து வரும் மின் கட்டணம் உச்சகட்டத்தை எட்டி விடும்.
பெண்களுக்கு உரிமைத்தொகையாக, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்போவதாக, காங்., தலைவர் ராகுல் சொல்கிறார். அதேபோல, படித்து முடித்து விட்டு, வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் தருவதாக, அறிவித்துள்ளார்.
இந்தியாவில், காங்., வெற்றி பெற்றால், 30 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தப்போவதாக, ராகுல் தெரிவித்துள்ளார். அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனில், பிரதமர் மோடியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். பிரதமராக ராகுல் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

