தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் மீண்டும் வெற்றி

மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் மீண்டும் வெற்றி

மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் மீண்டும் வெற்றி


ADDED : மே 04, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மீண்டும் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ., சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், காங்., சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் போட்டியிட்டனர். இத்தொகுதியில் பா.ஜ., காங்., வேட்பாளர்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. முதல் சுற்றில் இருந்தே பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் முன்னிலை வகித்து வந்தார். பின், அடுத்த சுற்றுகளில் முன்னிலையில் இருந்து வந்த நிலையில், இறுதி சுற்றில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் 15,918 ஓட்டுகள் பெற்று, காங்., வேட்பாளர் செல்வத்தை விட 6110 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

த.வெ.க., வேட்பாளர் பாரதிதாசன் 3032 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2வது முறையாக மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ.,வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us