/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
9 அரசு பள்ளிகளுக்கு தேச தலைவர்கள் பெயர் சூட்டல்
/
9 அரசு பள்ளிகளுக்கு தேச தலைவர்கள் பெயர் சூட்டல்
ADDED : செப் 13, 2024 06:45 AM
புதுச்சேரி: அமைச்சரவை பரிந்துரையை ஏற்று 8 அரசு பள்ளிகளுக்கு தேசத் தலைவர்களின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு தேசத்தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என, சட்டசபை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
அதனையேற்று அமைச்சரவை கூட்டத்தில் 8 அரசு பள்ளிகளுக்கு தேசத் தலைவர்களின் பெயர் சூட்ட முடிவு செய்து, இதுதொடர்பான கோப்பு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோப்பை பரிசீலித்த கவர்னர் கைலாஷ்நாதன், 8 பள்ளிகளுக்கு தேசத் தலைவர்களின் பெயர் சூட்ட ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியை, சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மேல்நிலைப் பள்ளி எனவும்; துத்திப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியை திருப்பூர் குமரன் அரசு தொடக்கப்பள்ளி எனவும்; கரசூர் அரசு தொடக்கப் பள்ளியை, பகத்சிங் அரசு தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரசு உயர்நிலைப் பள்ளி, சேந்தநத்தம் அரசு தொடக்கப்பள்ளியை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு தொடக்கப்பள்ளி எனவும், அரசூர் அரசு தொடக்கப் பள்ளியை, ஏ.பி.ஜே. அப்துல்காலம் அரசு தொடக்கப் பள்ளி என மாற்றப்பட்டுள்ளது.
கோபாலன் கடை அரசு தொடக்கப் பள்ளியை சரோஜினி நாயுடு அரசு தொடக்கப்பள்ளி எனவும், அய்யங்குட்டிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியை, ஜான்சி ராணி அரசு தொடக்கப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.