தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாராயணசாமி எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

நாராயணசாமி எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

நாராயணசாமி எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கல் 


ADDED : ஜூலை 15, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

​புதுச்சேரி: உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில், நாராயணசாமி எம்.எல்.ஏ., பெயரில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. ரெட்டியார் பாளையம் அன்பு நிலையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக, தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில், ஆதரவாளர்கள் மூலம் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, ரெட்டியார்பாளையம், ஜவஹர் நகர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, நாராயணசாமிக்கு சால்வை அணிவித்தும், வாழ்த்து தெரிவித்தார். பின், தொகுதி பயனாளிகளுக்கு தள்ளுவண்டி, தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதில், உழவர்கரை என்.ஆர்.காங்., பிரமுகர் சந்துரு ராதா, ரெட்டியார்பாளையம் வார்டு தலைவர் காமராஜ், என்.ஆர்.காங்.,  நிர்வாகிகள் ஜெயராஜ், கார்த்திகேயன், அஞ்சாலாட்சி, ஆனந்த், செல்வம் மற்றும் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us