/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப் பொருள் ஒழிப்பு நார்கோ குழு ஆலோசனை
/
போதைப் பொருள் ஒழிப்பு நார்கோ குழு ஆலோசனை
ADDED : மே 16, 2024 02:56 AM

புதுச்சேரி: மாவட்ட அளவிலான போதைப் பொருள் ஒழிப்பு நார்கோ குழுவின் ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.
புதுச்சேரியில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவிலான நார்கோ ஒருங்கிணைப்பு குழுவின் 5வது கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, சப் கலெக்டர் வினயராஜ், வடக்கு சப்கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன், கல்வித்துறை துணை இயக்குநர் சிவகாமி, சமூக நலத்துறை, வனத்துறை, துறைமுக துறை, கடலோர காவல்படை, வேளாண் துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. கஞ்சா பயிர் போன்ற சட்டவிரோத பயிர் சாகுபடியை கண்காணிக்க வேண்டும். போதைப் பொருட்கள் புழக்கம், கடத்தல் மற்றும் விற்பனையை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டும். பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறை சார்பில், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் என்.சி.சி., மூலம் போதைப் பொருள் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களை விளையாட்டு, இசை, நடனம் போன்வற்றில் ஈடுபடுத்த பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் கண்டறிதலுக்கான உபகரணங்கள் தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களில் மேற்பார்வையிடுதல் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.