/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி பரிசளிப்பு விழா
/
தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மார் 11, 2025 06:06 AM

புதுச்சேரி: அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுரியில் நடந்த 41வது தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் அகமதாபாத் நிர்மா பல்கலைக்கழகம் முதல் பரிசு வென்றது.
புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், 41வது தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி கடந்த 7ம் தேதி துவங்கியது. நாடு முழுதும இருந்தும் 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், அகமதாபாத் நிர்மா பல்கலைக்கழகம் முதல் பரிசும், திருச்சி அரசு சட்டக் கல்லுாரி 2ம் பரிசு வென்றது.
பரிசளிப்பு விழாவில், அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜன் திலகவதி, தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறந்த எழுதுமுறை வாதத்திற்கான பரிசு தருமபுரி அரசு சட்டக் கல்லுாரியும், சிறந்த ஆண் வழக்கறிஞர் பரிசு பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் லா த்ரிஷித், சிறந்த பெண் வழக்கறிஞர் பரிசு கே.எம்.சி., திரிப்பூரைச் சேர்ந்த ஸ்ரீலேகா, சிறந்த ஆராய்ச்சியாளருக்கான பரிசு திருச்சி அரசு சட்டக் கல்லுாரி இன்பா ஸ்ரீராம் சங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விழாவில், கே.எம்.சி., சட்டக் கல்லுாரி பேராசிரியர் சவுந்தரபாண்டியன், போபால் தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஜயகுமார், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., சிறப்புரை ஆற்றினர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் வரதராஜன் நன்றி கூறினார்.