ADDED : மார் 05, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆராமுதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மணிகண்டன் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
மாணவர்களை ஊக்குவிக்க, இயற்பியல், வேதியியல், கணிதம் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு, சைபர் குற்றம் தடுப்பு குறித்து விளக்கப்பட்டது. பேராசிரியர்கள் ராஜி, இளங் கோவன், ஞானமுருகன், பிரவீன் குமார கலந்து கொண்டனர்.