ADDED : ஜூலை 12, 2026 07:02 PM
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த தேசிய கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை சார்பில் ‘இந்திய அமெரிக்க உறவுகள் மற்றும் முக்கிய திருப்பு முனைகள்’ எனும் தலைப்பில், தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார்.
துறை தலைவர் சக்திவேல் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமாண்டர் சேஷாத்திரி வாசன், கலைப்புல முதல்வர் அருள் ஆகியோர் அமெரிக்க இந்தியா உறவு குறித்து பேசினர்.
அமைப்பு செயலாளர் தேவநாதன் கருத்தரங்க தலைப்பை அறிமுகம் செய்தார். ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.
இரண்டு நாள் கருத்தங்கில், இந்தியா–அமெரிக்க உறவுகளின் வரலாற்று பரிணாமம், அரசியல், பொருளாதார, கலாச்சார, இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள், என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,
கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
