/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய விளையாட்டு தின பரிசளிப்பு விழா
/
தேசிய விளையாட்டு தின பரிசளிப்பு விழா
ADDED : செப் 05, 2024 05:23 AM

புதுச்சேரி: கல்லுாரி விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை சார்பில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி பல்நோக்கு கருத்தரங்க கூடத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.
கல்லுாரியின் பொறுப்பு முதல்வர் ஹன்னா மோனிஷா தலைமை தாங்கினார். கல்லுாரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் ஆதவன் வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர் கதிரவன் சிறப்புரையாற்றினார்.
கல்லுாரியின் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் ஆதவன் செய்திருந்தார். நிகழ்ச்சியை பேராசிரியர் ரேவதி தொகுத்து வழங்கினார். மாணவி காவியா நன்றி கூறினார்.